சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுகாதார ஊழியர்களின் அனைவருக்குமான சுய பாதுகாப்பு உபகரணங்களை தேவையான அளவு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் கேரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தொடர்ச்சியான பணியின் காரணமாக வைத்தியசாலைகளில் சுய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்கள் போன்றவற்றிற்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரியவருகிறது. எனவே சகல வைத்தியசாலைகளிலும் சுகாதார ஊழியர்களை பாதுகாக்கக் கூடிய அளவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அவர்கள் தங்களது உயிர்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வளர்முக நாடுகளில் கூட பாதுகாப்பு உபகரண தட்டுப்பாட்டால் பெருந்தொகையான வைத்திய ஊழியர்கள் மரணித்துவிட்டனர்.

எனவே இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட அரசு முன்வர வேண்டும். கிராமங்களில் செயற்படும் பொதுக்கள உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் செயற்படும் தாதிய உத்தியோகத்தர்கள் வைத்தியர்கள் உட்பட அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment