போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
யுஎஸ்எஸ் கிட் என்ற கப்பலில் உள்ளவர்களில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. பென்டகனும் இதனை உறுதி செய்துள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலில் 300 மாலுமிகள் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கப்பல் கரீபியன் மற்றும் கிழக்கு பசுவிக் பகுதியில் போதைப் பொருள் கடத்தலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
கப்பலின் மருத்து பணியாளரான வீரர் ஒருவரே முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார் என பென்டகன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கடற்படை வீரர் டெக்சாசில் கிசிச்சை பெற்று வருகின்றார், இதன் பிறகு மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.
மேலும் பலர் பாதிக்கப்படலாம் என கருதுகின்றோம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்கள் துறைமுகத்திற்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment