கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால், எரிப்பதால் ஆபத்தா? - இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால், எரிப்பதால் ஆபத்தா? - இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை

கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் பகுதிகளில் இருந்து நோய் தொற்றுவதற்கான வாய்ப்பில்லை என இந்தியாவின் மேற்கு வங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அரச அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் மம்தா பானர்ஜி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தினது அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி மாநில அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரசினால் இறந்தவரின் உடல் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

உடலை எரிப்பதன் காரணமாக உண்டாகும் புகையினால் எந்த ஆபத்துமில்லை என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறந்தவரின் உடலை தகனம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மேற்கு வங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையிலேயே மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment