நல்லாட்சியில் அரசியலமைப்பினை மீறியவர்கள் தண்டிக்கப்படுவார்கள், - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, April 30, 2020

demo-image

நல்லாட்சியில் அரசியலமைப்பினை மீறியவர்கள் தண்டிக்கப்படுவார்கள், - ரோஹித அபேகுணவர்தன

625.500.560.350.160.300.053.800.900.160.90
(இராஜதுரை ஹஷான்) 

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்ட அரச தலைவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல விடயங்கள் வெறுக்கத்தக்க விதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்த்தரப்பினர் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்று முதல் ஜனாதிபதிக்கு நிதி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

புதிய பாராளுமன்றம் கூடும் வரையில் நிதி அதிகாரத்தை பயன்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்த்தரப்பினர் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தை இன்று சவாலுக்குட்படுத்துகின்றார்கள். அரசியலமைப்பினை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அக்கடித்த்தில் சுட்டிக்காடப்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளிப்படுத்தினார். நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பினை மீறியவர்கள் எதிர்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள். கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒருபோதும் மீண்டும் கூட்டப்படாது என்றார். 

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *