வைரஸ் பரிசோதனைகள் உள்ளிட்ட 7 முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

வைரஸ் பரிசோதனைகள் உள்ளிட்ட 7 முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தல் மற்றும் வைரஸ் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை மேலும் விஸ்தரித்தல் உள்ளிட்ட 7 முக்கிய யோசனைகளை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், யோசனைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைத்தல் என்பவற்றுக்காக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தினர் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிராச்சியை அமைச்சில் சந்தித்தனர். இதன் போதே இவ்வாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,

இருமள், தடிமன் என்பன காணப்படுவோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று உறுதி செய்யப்படும் வரை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். 

கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் மற்றும் எடுகோள்கள் என்பன விஸ்தரிக்கப்பட வேண்டும். 

இருமள், தடிமன் என்பவற்றினால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்கள் வேறு அறைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார சேவை குழுவுக்காக வழங்கப்பட வேண்டிய தனிநபர் பாதுகாப்பு ஆடை உள்ளிட்டவற்றை வைத்தியசாலைகளில் போதுமானளவு பெற்றுக்கொடுத்தல். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தல். 

மருத்துவ சிகிச்சையின் போது நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறல் என்பனவே சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 7 ஆலோசனைகளாகும். 

இந்த யோசனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு ஆயுள் திட்டத்தினை அறிமுக்கப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை காலத்தின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டமைக்கு வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நன்றி தெரிவித்தார். 

இதேபோன்று ஏனைய யோசனைகளும் காலத்தின் தேவைக்கேற்பவை என்பதோடு, அவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

அத்தோடு கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார். 

சிறந்த முகாமைத்துவத்துடன் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு இதன்போது வைத்திய நிபுணர்கள் சங்கம் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தது. 

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லலந்த ரணசிங்க, சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் அசோக குணர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment