(தி.சோபிதன்)
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார்.
அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார். யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்துள்ளார் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டிருத்தனர். இவர்களில் சிலர் வெலிகந்த, கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பேர் குணமடைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 5 ஆவது நபரும் இன்று குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்படவுள்ளார். இதன்படி யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குணமடைய மிகுதியாக 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment