மேற்கு ஆபிரிக்க நாடொன்றின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் 4 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

மேற்கு ஆபிரிக்க நாடொன்றின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் 4 பேருக்கு கொரோனா

மேற்கு ஆபிரிக்க நாடான கினியா பிசாவு நாட்டின் பிரதமர் நுனோ கோம்ஸ் நபியம் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேற்கு ஆபிரிக்க நாடான கினியா பிசாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நபியம் மூன்றாவது இடத்தை பிடித்தார். இறுதியில் வெற்றியாளரான ஜனாதிபதி உமரோ சிசோகோ எம்பலோவால் கடந்த பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கொரோனா தொற்று உறுதியான பிரதமர் நபியம், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் போட்சே கேண்டே மற்றும் இரு அமைச்சர்களும் தலைநகர் பிசாவுலிலுள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அன்டோனியோ டியூனா தெரிவித்தார். 

கினியா பிசாவு நாட்டில் இதுவரை 205 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 19 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment