நாட்டிலுள்ள 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 1,741 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

நாட்டிலுள்ள 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 1,741 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 1,741 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று நான்கு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 155 பேர் தமது வீடுகளுக்குத் திரும்பவுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினண்ட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மருதானையில் கண்டறியப்பட்டு உயிரிழந்த கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியுள்ள 314 பேர் அடையாளங்காணப்பட்டுள்ள 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினால்ட் ஜெனரால் சதுவந்திர சில்வா தெரிவித்தார்.

தியத்தலாவை, ரன்டெம்பே, குண்டசாலை, பெரியகாடு, தந்திரிமலை மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களிலிருந்து 288 பேர் நேற்று 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர். முப்படையினரின் கீழ் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இதுவரை 2,308 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

முப்படையினரின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முடித்துக்கொண்டு 2,598 பேர் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருதானையிலுள்ள குடியிருப்புத் தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் தொடர்பை பேணிய 302 மருதானையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெல்லம்பிட்டியவில் 12 பேரும் இவருடன் தொடர்பை பேணியுள்ளனர். இந்த314 பேரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 40 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 1,741 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய தினம் 4 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களிலிருந்து 155 பேர் தமது வீடுகளுக்குத் திரும்பவுள்ளனர்.

சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment