இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று (05) இரவு 8.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 174 இலிருந்து 175 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 இலிருந்து 33 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் (05) இதுவரை 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 06 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 175 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment