முன்பள்ளிகள் தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

முன்பள்ளிகள் தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி

முன்பள்ளிகள் தொடர்பில் வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

குறித்த தேசிய கொள்கை, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வற்காக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலான படையணியின் தலைவர் பேராசிரியர் உபாலி சேதர தெரிவித்தார்.

முன்பள்ளி தேசிய கொள்கை தொடர்பிலான ஆலோசனைகளை கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலான படையணிக்கு அறிவிக்க முடியும் என அவர் கூறினார்.

முன்பள்ளி மாணவர்களுக்கான கல்வி தரப்படுத்தப்படவுள்ளதாக பேராசிரியர் உபாலி சேதர கூறினார்.

முன்பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டிய விடயதானங்கள் தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment