கடலில் வைத்து 400 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 28 சந்தேக நபர்களையும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ண இன்று பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்துக்கு அனுமதி வழங்கினார்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்களின் மொத்த பெறுமதி 6,000 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் வைத்து பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையென பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
மேலும் இலங்கை கடல் எல்லையிலிருந்து 600 கடல் மைல் (1111 கிலோ மீற்றர்) தொலைவில் சுமார் 6 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயினும் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நீதவானிடம் சுட்டிக்காட்டினர்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 11 ஆம் திகதியன்று சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment