நாட்டின் அனைத்து நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் சூழலின் தூய்மையை பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
மக்கள் நேய சூழல் முறைமையொன்றை உறுதி செய்வதன் மூலம் மக்களின் உடல் மற்றும் உள சுகாதார நிலைமையை மேம்படுத்தல், நகர வாகன நெரிசலைக் குறைத்தல் மற்றும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கும் முடியும்.
நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை மீறி சுற்றாடலை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றாடலின் தூய்மையை வினைத்திறனாக பேணுவதற்காக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவுகளை அறிவூட்டுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசேட செயற்திட்ட, சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (06) கொழும்பு கோட்டையில் உள்ள செமா கட்டிடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் சுற்றாடல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கொழும்பு நகரத்தை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுத்தமான நகரமாக மாற்றுவதும் இக்கலந்துரையாடலின் நோக்கங்களில் ஒன்றாகும்.
மக்கள் நேய சூழல் ஒன்றை பேணுவதற்கு உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன. கழிவகற்றுவதற்கு உரிய இடங்கள் இல்லாமை, முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றுதல், அதிகாரிகளின் பற்றாக்குறை, உள்ளூராட்சி நிறுவனங்கள் போதுமான வகையில் அதிகாரிகளை அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமை போன்றன அவற்றுள் சில பிரச்சினைகளாகும். சில பிரதேசங்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய நிறுவனங்கள் இல்லாதிருப்பதும் பிரச்சினையானதாகும். இந்த விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்தவுடனேயே பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவை புனரமைக்குமாறு பணிப்புரை விடுத்ததாக பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment