பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பாக சட்ட விதிகள், கட்சி அலுவலகங்களை அமைத்தல், கட்சி கூட்டம் தொடர்பிலான சட்ட விதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
No comments:
Post a Comment