கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளருடன் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
44 வயதான குறித்த நபர் தற்போது அங்கொடை தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 30 பேர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாட்டவர்கள், மூன்று கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
No comments:
Post a Comment