நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பில் முறைகேடுகள் இடம்பெறுவதை தடுக்கும் பொருட்டு மரணமடைந்த மற்றும் வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் உங்கள் குடித்தனத்தின் பெயர்கள் அடங்கிய வாக்காளர்கள் மத்தியில் 2020.03.10 திகதி ஆகும் போது மரணமடைந்துள்ள அல்லது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் பற்றிய தகவல்களை 2020.03.14 ஆம் திகதிக்கு முன்னர் வசிக்கும் பிரதேசத்துக்குரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அல்லது பிரதேசத்தின் கிராம அலுவலருக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment