இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
52 வயதான குறித்த நோயாளர் கொழும்பைச் சேர்ந்தவர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இலங்கையில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நோயாளர் அங்கொடையிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments:
Post a Comment