ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்றைய தினம் இரு தரப்பினர் ஆர்பாட்டம்! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 12, 2020

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்றைய தினம் இரு தரப்பினர் ஆர்பாட்டம்!

(ஆர்.விதுஷா) 

ஜனாதிபதி செயலக்திற்கு முன்பாக இரு வேறு தரப்பினர் இன்று நண்பகல் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரும், பாம் எண்ணை உற்பத்தியை நிறுத்துமாறு கோரி சூழல் பாதுகாப்பு சார் தொழில் சங்க ஒன்றியத்தினருமே இவ்வாறு எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்கள் கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர். 

இதன்போது வாக்குறுதியை நிறைவேற்று, பாகுபாடின்றி அனவருக்கும் தொழில் கொடு, தொழில் உரிமையாகும் என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர். 
அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை அடைந்ததும் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் ஆர்ப்பாட்டகார்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர்களில் சிலருக்கு ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. 

அதேவேளை, சூழல் சார் தொழில் சங்க ஒன்றியத்தினரின் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 50 இற்கும் அதினமானோர் கலந்து கொண்டதுடன், பாம் எண்ணை உற்பத்தியை நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad