தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசு தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது : சாள்ஸ் நிர்மலநாதன் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 14, 2020

தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசு தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது : சாள்ஸ் நிர்மலநாதன்

தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசு தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 

இவ்விடையம் தொடர்பாக அவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

கொரோனா தொற்று வைத்திய பரிசோதனைக்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 213 பேர் 05 பஸ்களில் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வெளிநாட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 6.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 05 பஸ்களில் கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு 213 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தி எதிர்வரும் 14 நாட்களுக்குச் சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று சந்தேக நபர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மையப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. 

இலங்கையில் எவ்வளவோ பிரதேசங்கள் இருக்கும் போது ஏன் இந்த அரசாங்கம் தமிழர் பிரதேசங்களைக் குறிவைக்கின்றனர்? இதற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஏன் மௌனமாக இருக்கின்றனர்? 

அரசு இதனைக் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் அவசரமான கண்டனத்தை வெளியிடுகின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad