பெரிய வெங்காயத்திற்கான உச்சபட்ச சில்லறை விலை ரூபா 150 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட, மைசூர் பருப்பு மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றிற்கான உச்சபட்ச சில்லறை விலைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்டது.
No comments:
Post a Comment