மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை (13) மதியம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 9 பேரும் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் வினோபா இந்திரன் முன்னிலையில் இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளளது.
கொரோனா நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கூடாதென இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த இடத்தில் பெருமளவிலான பொலிசார் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது இவர்கள் கைது செய்யப்படடனர்.
இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென சாதாரண நோயாளிகளைக் கொண்டுவரும் அம்பியூலன்ஸ் வண்டிகளையும் வைத்தியசாலைக்குள் நுழைய முடியாதவாறு இவர்கள் தடுத்து நிறுத்துவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வைத்தியசாலை சூழலில் கலகம் அடக்கும் பொலிசார் பெருமளவில் குவிக்கபட்டுள்ளதால்அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரார்கள் கலைந்து சென்றனர்.
(மட்டக்களப்பு நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)
No comments:
Post a Comment