கிழக்கு மாகாணத்தில் சகல பரீட்சைகளும், போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

கிழக்கு மாகாணத்தில் சகல பரீட்சைகளும், போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கான சகல பரீட்சைகளும் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார். 

கொரோனா அச்சம் காரணமாக நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடப்பட்டதையடுத்தே கிழக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சகல பரீட்சைகளும் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

சிலவேளை வலயத்திலிருந்து பரீட்சை வினாத்தாள்கள் அதிபர்களினால் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அதனைத் திறக்காது அப்படியே மீண்டும் வலயக் கல்விக் காரியாலயத்தில் ஒப்படைத்து விடுமாறு கேட்கப்பட்டுள்ளது. 

நாளையதினம் தொடக்கம் க.பொ.த உயர்தரத்திற்கான முன்னோடிப் பரீட்சை நடைபெறவிருந்தது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் முன்னோடி மாதிரிப் பரீட்சை நடைபெறவிருந்தது. மேலும் வலயங்களில் விளையாட்டுப் போட்டிகள், தமிழ் மொழித்தினப் போட்டிகள் போன்றனவும் நடைபெறவிருந்தன. இவை அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது .

காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment