அரபுக் கல்லூரி பதிவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - தகவலறியும் சட்டம் மூலம் விபரம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

அரபுக் கல்லூரி பதிவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - தகவலறியும் சட்டம் மூலம் விபரம் தெரிவிப்பு

அரபுக் கல்­லூ­ரி­களை பதி­வு­ செய்யும் நட­வ­டிக்­கை­களை தற்காலிகமாக இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்பாட்டலு­வல்கள் திணைக்­களம் தெரிவித்­துள்ளது. 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­த­லை­ய­டுத்தே இந்த தற்­கா­லிக இடை­நி­றுத்தம் அமுல்படுத்தப்­பட்­டது எனவும் திணைக்­களம் குறிப்­பிட்­டது.

எனினும், 65 அரபுக் கல்­லூ­ரிகள் பதி­வுக்­காகத் தற்­போது விண்ணப்பித்­துள்­ள­தா­கவும் திணைக்­களம் தெரி­வித்­தது.

தக­வ­ல­றியும் சட்­டத்­திற்­க­மை­வாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­க­ளத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் அறியும் கோரிக்­கைக்கு பதில் வழங்­கும்­போதே முஸ்லிம் சமய பண்பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கு­றிப்­பிட்ட தக­வலை வெளி­யிட்­டது.

குறித்த தக­வலில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, “கடந்த 1981 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்த திணைக்­க­ளத்தில் இது­வரை 317 அரபு கல்­லூ­ரிகள் பதி­வு­ செய்­யப்­பட்­ட­டுள்­ளன.

இதில் அதி­கூ­டிய 41 அரபுக் கல்­லூ­ரிகள் அம்­பாறை மாவட்­டத்தில் பதி­வு­ செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்கு மேல­தி­க­மாக புத்­தளம் மாவட்டத்தில் 37 அரபுக் கல்­லூ­ரி­களும், திரு­கோ­ண­மலை மாவட்டத்தில் 29 அரபுக் கல்­லூ­ரி­களும், கண்டி மாவட்­டத்தில் 28 அரபுக் கல்­லூ­ரி­களும், கொழும்பு மாவட்­டத்தில் 26 அரபுக் கல்லூரிகளும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 25 அரபுக் கல்­லூ­ரி­களும் பதி­வு ­செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சமயம் சார்ந்த விடயம் என்­ப­தனால் அரபுக் கல்­லூ­ரி­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கையை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு கல்­வி­ய­மைச்சு வழங்­கி­யுள்­ளது. 

இதனால், திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக அரபுக் கல்லூரிகளின் விட­யத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் முன்­னெ­டுத்­துள்­ளது.

அல்-ஆலிம் பகுதி - 01 மற்றும் பகுதி - 02 ஆகி­யன பதி­வு ­செய்­யப்­பட்ட அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­காக திணைக்­க­ளத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட பாடத்திட்டமாகும்.

இதேவேளை, மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி ஆகியவற்றைப் போதிக்கும் அரபுக் கல்லூரிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணியை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli - றிப்தி அலி

No comments:

Post a Comment