அமெரிக்க விமானம் மீது லேசர் தாக்குதலா? - சீனா மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

அமெரிக்க விமானம் மீது லேசர் தாக்குதலா? - சீனா மறுப்பு

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு விமானம் மீது லேசர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது.

சீனா உரிமை கொண்டாடும் தென்சீனக் கடலுக்கு வடமேற்கு பகுதியில் கடந்த மாதம் அமெரிக்க கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சீன கப்பலில் இருந்து லேசர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு விமானம் மற்றும் பிற நாடுகளின் விமானங்களை சேதப்படுத்தி வீரர்களை காயப்படுத்துவதற்காக சீனப் படைகள் லேசர்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டது. 

இந்த குற்றச்சாட்டை சீன பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருப்பதுடன், உண்மைக்கு புறம்பானது என்று கூறி உள்ளது. 

இது பற்றி சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங் கூறுகையில், ‘சம்பவம் நடந்ததாக கூறப்படும் பெப்ரவரி 17 ஆம் திகதி சர்வதேச கடற்பகுதியில் சீன படையினர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது சீன படைகளின் எச்சரிக்கையை மீறி, அங்கு அமெரிக்காவின் பி-8 ஏ போஸிடான் விமானம் குறைந்த உயரத்தில் நீண்ட நேரம் வட்டமடித்தது.

அமெரிக்க விமானத்தின் இந்த செயலானது, நட்புறவை மீறுவதுடன், இரு தரப்பு கப்பல்கள், விமானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தும் வகையில் இருந்தது’ என்றார்.

No comments:

Post a Comment