பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு புதிதாக திட்டங்கள் ஏதும் வகுக்கப்பட வேண்டிய தேவை கிடையாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு புதிதாக திட்டங்கள் ஏதும் வகுக்கப்பட வேண்டிய தேவை கிடையாது

இராஜதுரை ஹஷான்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவே சர்வ கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு புதிதாக திட்டங்கள் ஏதும் வகுக்கப்பட வேண்டிய தேவை கிடையாது. 

அனைத்து பிரச்சின்னகளுக்கும் தீர்வை கண்டதன் பின்னர் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். 

பலவீனமடைந்த நிலையிலேயே அரசாங்கத்தை பொறுப்பேற்றோம். தற்போதைய நிலையில் தேசிய பொருளாதாரம் பல்வேறு துறைகளை மையப்படுத்தி வீழ்ச்சியடைந்த்துள்ளது. 

பொதுத் தேர்தலை தொடர்ந்து பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும். என்றார்.

No comments:

Post a Comment