கிழக்கு மாகாணத்திற்கான கொரோனா சிகிச்சைப் பிரிவு மட்டக்களப்பில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

கிழக்கு மாகாணத்திற்கான கொரோனா சிகிச்சைப் பிரிவு மட்டக்களப்பில் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்திற்கான கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கதிற்குள்ளாவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட சிகிச்சைப் பிரிவு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. 

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற சிகிச்சைப் பிரிவு ஆரம்ப வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து வைத்து பார்வையிட்டார். 

ஒரே நேரத்தில் ஆறு கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அறுபது கட்டில்களைக் கொண்ட விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளர்களுக்கே இங்கு சிகிச்சையளிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment