அமெரிக்க யுத்த கப்பலில் மூவருக்கு கொரோனா வைரஸ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

அமெரிக்க யுத்த கப்பலில் மூவருக்கு கொரோனா வைரஸ்

அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றின் மூன்று கடற்படை வீரர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் அறிவித்துள்ளது. 

யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்ட் என்ற நாசகாரி கப்பலில் பணிபு ரிந்த மூன்று கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது. 

இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர், அமெரிக்க போர்க் கப்பலில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்புகொண்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க நாசகாரி இறுதியாக 155 நாட்களிற்கு முன்னர் வியட்நாம் துறைமுகமொன்றிற்கு சென்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் அங்கிருந்துதான் நோய் தொற்றியது என்பதை தெரிவிக்க முடியவில்லை, பல போர் விமானங்கள் அந்த கப்பலில் தரையிறங்கியிருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

குறிப்பிட்ட கப்பலில் சுமார் 5000 கடற்படையினரும் பணியாளர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad