கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான பி.ஆர்.சி. இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.
பிரதமரின் விஜயராம இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இயந்திரம் கையளிக்கப்பட்டது. 30000 டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவரை அடையாளப்படுத்த முடியும். மிக இலகுவில் பயன்படுத்தக் கூடிய இந்த இயந்திரம் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கப் பெற்ற பரிசாகும்.
கொவிட்-19 வைரஸ் உலக நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட பரிசை சுகாதரா அமைச்சுக்கு வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment