இன்று நள்ளிரவு (12) முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ப்ரொய்லர் (Broiler) கோழி இறைச்சியின் உச்சபட்ச சில்லறை விலை தோலுடன் ரூ. 475 இலிருந்து ரூபா. 430 ஆகவும், தோலின்றி ரூபா. 600 இலிருந்து ரூபா. 530 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, போதுமானளவு சோளம் கையிருப்பில் உள்ள நிலையில் செயற்கையாக சோளம் தட்டுப்பாட்டை உருவாக்கி, பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கான முயற்சி குறித்து உடனடி விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment