பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார் இந்தியப் பிரமதர் மோடி.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமலும், அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதிலும் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் உரையாடிய இந்நியப் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
"கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உங்கள் வாழ்க்கையை, முக்கியமாக ஏழைகளின் வாழ்க்கையை கடினமாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள். ஆனால், இந்த யுத்தத்தை வெல்ல சில கடினமான நடவடிக்கைகள் தேவை" என்றார்.
மேலும், யாரும் வேண்டுமென்றே விதிகளை மீறுவதில்லை. ஆனால் விதிகளை மீறும் சிலரும் உள்ளனர். தற்போது விதிகளை அலட்சியப்படுத்தி நம்மை நாம் பாதுகாக்க தவறினால், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும் என அவர் மேலும் கூறினார்.
"நம் நாட்டில் பல இராணுவ வீரர்கள் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வருகின்றனர். நம் சகோதர சகோதரிகள் பலர் தாதியர்களாகவும் மருத்துவர்களாகவும் நமக்காக பணிபுரிவதைதான் நான் சொல்கிறேன்."
2020 ஆம் ஆண்டு உலக தாதியர்களுக்கான சர்வதேச ஆண்டாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து தாதியர்களுக்கும் தலை வணங்குகிறேன் என்று அவர் கூறினார்.
உடல் ரீதியாக விலகி இருந்தாலும், மனதளவில் இணைந்து இருங்கள் என்றும் பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment