தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் பணி நிறைவு - சுற்றுநிரூபத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் பணி நிறைவு - சுற்றுநிரூபத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேன்முறையீடு தொடர்பான பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டுக்காக தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்காக சுற்றுநிரூபத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த சுற்றறிக்கை ஜுன் மாதம் அளவில் வெளியிட வேண்டும். வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் வகுப்புக்களிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதற்காக பெற்றோர் கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமாகும்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நிறைவடையும் வரையில் ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களும் நியமனங்களும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment