கொரோனா வைரஸ் வெப்பநிலைக்கு மத்தியில் பரவுவது விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

கொரோனா வைரஸ் வெப்பநிலைக்கு மத்தியில் பரவுவது விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்படவில்லை

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்று வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா அல்லது குறைகின்றதா என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இந்த நோய் தொடர்பில் பாதுகாத்துக் கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பெரும்பாலானோருக்கு பொதுவான நோய் நிலைமையாக ஏற்படக்கூடியது. சிலருக்கு சிக்கலைக் கொண்டதாக ஏற்படக்கூடும். 

மேலும் சிலருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அனர்த்த வலயத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் அவதானத்துடன் செயற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இருமல், தும்மலின் போதும் வெளியேறும் எச்சில் மூலமும் பரவக்கூடும். காற்றின் மூலம் இது பரவக்கூடிய தன்மை மிகவும் குறைவானதாகும் என்றும் விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment