ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையர்கள் இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் அவர்களின் நிலைமை மோசமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இரண்டு இலங்கையர்கள் உட்பட 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று (10) கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் இத்தாலியர்கள் மூவர், பிரித்தானியர்கள் இருவர், இந்தியர்கள் இருவர், ஜேர்மனியர் ஒருவர், தென் ஆபிரிக்கர் ஒருவர், தன்சானியர் ஒருவர், ஈரானியர் ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.
இவர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதோடு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் இதுவரை 74 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment