மைக்ரோசொஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் பில்கேட்ஸ் - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் பில்கேட்ஸ்

மைக்ரோசொஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து முழுமையாக வெளியேற இருக்கிறார். 

தொண்டு நடவடிக்கையில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பருவமாற்றம் தொடர்பான விஷயங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்.

பில்கேட்ஸுக்கு இப்போது வயது 65. இவர் மைக்ரோசொஃப்ட் நிர்வாகக் குழுவில் மட்டும் இல்லை வாரன் பஃபட்டின் நிறுவன நிர்வாக குழுவிலும் இருந்தார். இப்போது அதிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். 

2017 கால கட்டத்தில் மட்டும் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி தொண்டு நடவடிக்கைகளுக்காக 2.8 பில்லியன் டொலர்களை அளித்திருக்கிறார்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக இரண்டு லட்சம் கோடி. மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு தோராயமாக இரண்டு லட்சம் கோடி.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment

Post Bottom Ad