சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவது கவலைக்குரியதாகும் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவது கவலைக்குரியதாகும் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

சமூக இணையத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியாகும் தவறான தகவல்களில் மக்கள் கவனம் செலுத்தி பீதி அடையக்கூடாது என்பதற்காகவே அரசாங்க தகவல் திணைக்களம் இந்த வைரஸ் தொற்று தொடர்பாக சரியான தகவல்களை உறுதி செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

கொரொனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விரிவான வகையில் தகவல்களை வழங்குவதற்காக அனைத்து இலத்திரயனில் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு இன்று இடம்பெற்றது.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமான தொக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையியில் கொரோனா தொற்றை தடுப்பதை தேசிய பொறுப்பாக கருதி இலத்திரணியல் அமைப்பு இன்று ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்.

திணைக்களத்தின் முயற்சியின் ஊடாக இலத்திரனியல் அமைப்பு அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர் இந்த அமைப்பில் இடம்பெறாத இலத்திரனியல் ஊடகங்கள் கலந்து கொண்டமைக்கும் நன்றி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் செயற்படுவது கவலைக்குரியதாகும். 

உண்மையான விடயங்களை உறுதி செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சகாதார அமைச்சு உள்ளிட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி கொவிட்-19 என்ற ஊடக மத்திய நிலையத்தை நாம் எற்பாடு செய்துள்ளோம்.

இதன் ஊடாகவே உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. வைரஸ் தொடர்பில் நாடு எதிர்கொண்டுள்ள சவாலுக்கு மத்தியில் அனைவருக்கும் இதில் பொறுப்புண்டு. இந்த வேலைத்திட்டங்களை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது. சர்வதேச ரீதியில் இன்று வளமிக்க நாடுகள் கூட பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து இதில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment

Post Bottom Ad