யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 17 பேர் கொரோனா அச்சம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைகளை மேற்கொண்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் 3 பேர் வைரஸ் தொற்று அச்சத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதகருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தததையடுத்து அவருடன் பழகியவர்களுக்கும் கொரோனொ தொற்று இருக்கலாமென்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததது.

இதனையடுத்து அவருடன் தொடர்பைப் பேணிய இரண்டு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவரில் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேவாலய ஆராதனையில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றவருக்கு தொற்று இருக்கா இல்லையா என்பது தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரையில் வெளிவரவில்லை. அந்த அறிக்கை வந்த பின்னரே அது தொடர்பான இறுதி முடிவு தெரியவருமெனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment