மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இன்று (11) பிற்பகல் 1.10 மணியளவில், மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றுக்குச் சென்று வீடு திரும்பிய நபர் மீது, மற்றுமொரு நபர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த குறித்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், காரியமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment