(நா.தனுஜா)
உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால் இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரண தண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதுவே இலங்கையின் நிலை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
இது குறித்து மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
'உலகின் ஏனைய நாடுகள் இராணுவத்திற்கு அவமதிப்பையும், இழிவையும் ஏற்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிப்பதன் ஊடாக தமது இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கின்றன. ஆனால் இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் எழுவரையும் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது'.
No comments:
Post a Comment