போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் வெளியாகின்றன.

இதுவரையில் இலங்கையில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கொடை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் குடும்பத்தில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் அவர்கள் உரிய முறையில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆகவே போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்பதோடு போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment