(செ.தேன்மொழி)
பொதுத் தேர்தலில் ஒன்றிணைத்து பயணிப்பது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறியுள்ள ஐக்கிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேவர்தன, பிரிந்து போட்டியிட்டாலும் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இருந்தால் இணைந்து செயற்படுவதற்கும் வாய்ப்புண்டு என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி பழைமை வாய்ந்த கட்சியாகும். அது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கப்பாடுப்பட்ட பல சிறந்த தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாக்கப்பட வேண்டும்.
அதன் அழிவுக்கு நாங்கள் காரணமாக அமையக் கூடாது. இதனால் பொதுத் தேர்தலில் நாங்கள் ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பிலே இன்னமும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment