ராஜபக்ஷக்களின் தேவையை நிறைவேற்றவே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் தனித்து களமிறங்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

ராஜபக்ஷக்களின் தேவையை நிறைவேற்றவே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் தனித்து களமிறங்க தீர்மானம்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்த பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருப்பது ராஜபக்ஷ்வினரின் தேவையை நிறைவேற்றுவதற்காகும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானித்ததுடன் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் செயற்குழு அங்கிகரித்தது. 

அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி குழுவும் சஜித் பிரேமதாச சார்பாக ஒரு குழுவும் பலசுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. 

இருந்தபோதும் கூட்டணி கட்சியின் யாப்பில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து, யானைச் சின்னம், அன்னச் சின்னம் என தெரிவித்து காலத்தை இழுத்தடித்து வந்தனர். இது மிகவும் மோசமான செயலாகும். 

அத்துடன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோது, எந்த சின்னமாக இருந்தாலும் சஜித் பிரேமதாச தலைமையிலேயே தேர்தலில் போட்டியி டவேண்டும் என தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், அது ராஜபக்ஷ்வினரின் தேவையை நிறைவேற்றுவதற்காகும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment