சீனாவில் கொரோன வைரசினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சமீபத்தில் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிந்த ஹோட்டல் இடிந்து விழுந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களில் 43 பேரை மீட்டுள்ளதாகவும் இவர்களில் 36 பேர் இன்னமும் உயிருடன் உள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஹோட்டலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சமீபத்தில் தொடர்புகொண்டிருந்தவர்களே தங்க வைக்கப்பட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எவருக்கும் நோய் பாதிப்பில்லை என மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்திருந்தன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடிபாடுகளுக்குள் இருந்து சிறுவர்களை மீட்டு அவர்களுக்கு முகக்கவசங்களை மீட்பு பணியாளர்கள் அணிவிப்பதை காண்பிக்கும், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஐந்து மாடிக் கட்டிடமொன்றே இடிந்துவிழுந்துள்ளது. இரண்டு மணித்தியாலத்தில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து குறிப்பிட்ட கட்டிடத்தில் தனது சகோதரியும் வேறு உறவினர்களும் கிசிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார்.
நான் அருகில் உள்ள காஸ் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் பாரிய சத்தமொன்று கேட்டது, நான் நிமிர்ந்து பார்த்தவேளை முழு கட்டிடமும் இடிந்து விழுந்து கொண்டிருந்தது, எங்கும் புகை மண்டலமாக காணப்பட்டது கண்ணாடி துண்டுகள் எங்கும் சிதறின என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். எனது கை,கால்கள் நடுங்க தொடங்கின என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment