இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஓரளவிற்கு வளர்ச்சி காணப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு டி லக்ஷ்மன் கருத்து தெரிவிக்கையில் பொதுவாக இது பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் இதன் தாக்கம் இடம்பெறக்கூடும்.
விசேடமாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளமை நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை ரீதியான வட்டி சதவீதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக நிலையான வைப்பீட்டுக்கான வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதிக்கான சதவீதம் 6.5 க்கு 7.5 ஆக மாற்றமின்றி முன்னெடுப்பதற்கும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment