வத்திக்கானில் இருந்து இணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை நடத்தியுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டது போல உணர்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இன்றைய ஏஞ்சலெஸ் பிரார்த்தனை சற்று வித்தியாசமானது, பாப்பரசர் நூலகத்தில் அடைக்கப்பட்டுள்ளார், ஆனால் நான் உங்களை பார்க்கின்றேன், நான் உங்களுக்கு அருகில் இருக்கின்றேன் என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தைய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்காகவும் நான் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளேன் என வழமையாக மக்களை சந்திப்பதற்காக பயன்படுத்தும் ஓவிய அறையில் நின்றவாறு பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் விசுவாசத்தின் வலிமையுடன் வாழுங்கள் நம்பிக்கையின் உறுதியுடனும் தர்மத்தின் உற்சாகத்துடனும் வாழுங்கள் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாப்பரசர் தனது உரையின் போது சிரியாவின் வடமேற்கு பகுதியில் இடம்பெறும் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதாபிமான நெருக்கடியிலிருந்து எங்களது கவனத்தை திருப்ப கூடாது என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த அறையின் ஜன்னல் கதவு சில நிமிடங்கள் திறக்கப்பட்டது, பாப்பரசர் அங்கு காணப்பட்ட மக்களை பார்த்து கையைசத்துள்ளார்.
நீண்ட தூரம் பயணம் செய்து பாப்பரசரிடம் நேரடியாக ஆசீர்வாதத்தை பெற வந்த பலர் பாப்பரசரை நேரில் சந்திக்க முடியாமல் போனமை குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment