மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்திருக்கின்றமை ஜனாதிபதி கோட்டாபாயவின் அரசாங்கம் சர்வாதிகார அரசு அல்ல என்பதை காட்டுவதாக உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சிட்த் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் 99 வீத வாக்குகளால் கொண்டு வரப்பட்ட கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழக செயற்பாடுகளை எந்தவித கேள்வியுமின்றி சர்வாதிகாரமாக இழுத்து மூடியது. அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லாவை இராஜினாமா செய்விக்க இனவாதிகளை தூண்டி முசுப்பாத்தி பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய அரசு சர்வாதிகாரமாக இப்பல்கலைக்கழகத்தை சுவீகரிக்காமல் கோரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கேட்டுள்ளமை ஜனாதிபதி கோட்டாபாயவின் நல்ல அரசாங்கத்தின் வெளிப்பாடாகும்.
அந்த வகையில் பல நோயாளிகளை காக்கும் இடமாக இப்பல்கலைக்கழகம் அமையுமாயின் அதுவும் மக்களுக்கு பிரயோசனம் தரும் விடயமாகும்.
அத்துடன் இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு பாவிப்பதன் மூலம் இப்பல்கலைக்கழகத்தை கட்டியமைக்காக கூக்குரலிட்ட இனவாதிகளுக்கும் ஹிஸ்புல்லா இதனை கட்டியதால்த்தான் நோயாளிகளுக்கும் அடைக்கலமாக மாறியுள்ளது என்ற பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.
அந்த வகையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடைக்கலமாக இப்பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக வழங்குவது சிறந்தது என்பதையும் அதேவேளை கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளை இங்கு கொண்டு வரும் போது அது இதுவரை கொரோனா பாதிப்பில்லாத மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம்களுக்கும் கொரோனா தொற்றாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது.
No comments:
Post a Comment