மஹிந்தவுடன் இணக்கமாக செயற்பட முடியாது என்பதனாலேயே ஜனாதிபதி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றார் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

மஹிந்தவுடன் இணக்கமாக செயற்பட முடியாது என்பதனாலேயே ஜனாதிபதி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றார்

(இராஜதுரை ஹஷான்) 

தனது சகோதரனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கமாக செயற்பட முடியாது. என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கம் ராஜபக்ஷர்களுக்கு கிடையாது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள்.

பொது சிவில் நிர்வாக சேவையில் இன்று அதிகளவில் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படுவதன் பின்னணி என்ன. இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப அடித்தளமே தற்போது இடப்படுகின்றது. இதற்கு தடையாக சுயாதீனப்படுத்தப்பட்ட நீதிமன்றம் உள்ளதால் 19 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி எதிர்க்கின்றார். இவர்களின் நோக்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment