குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜா சுரேந்திரன் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் இவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முத்துராஜா சுரேந்திரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்தார்.
No comments:
Post a Comment