மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜெயந்தியா பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு கெம்பஸ்ஸை கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்துவதனை நிறுத்துமாறும் மட்டக்களப்பு போதான வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பதே இக்கர்த்தாலின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும் பாடசாலைகளில் மாணவர் வரவின்மையில் பாரிய வீழ்ச்சியும் காணப்பட்டதுடன் மக்களின் அன்றாட வாழ்வும் பாதிப்படைந்திருந்தது.
அத்துடன் மட்டக்களப்பு கெம்பஸை அண்டியிலுள்ள பிரதேசங்களான ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற பிரதேச பாடசாலைகளில் கடந்த மூன்று நாட்களாக மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்பவில்லை எனவும் தெரியவருகின்றது.
அப்பிரதேச மக்கள் தாங்களும் கெரோனா பாதிக்கப்படலாம் என்ற அச்சத்துக்குள்ளகி இருப்பதாக தெரியவருகின்றது
No comments:
Post a Comment