கொழும்பு பங்கு சந்தையின் வழமையான பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 சுட்டியானது இன்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன.
இன்று மு.ப. 11.47 முதல் பி.ப. 12.17 வரை இவ்வாறு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 3.77% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறித்த நாளில் பங்குச் சந்தையின் பிரதான விலை சுட்டியான S&P SL20 ஆனது 5% இலும் குறைவடையும் நிலையில், பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள், தன்னியக்க முறையில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் (ASPI) ஒரே நாளில் 221.24 ஆக குறைந்து வரலாற்றில் 2ஆவது முறையாக இவ்வாறு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment