இந்தியாவில் இருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணம் சென்றுள்ளோரை அழைத்து வருவதற்காக இன்று மாலை விசேட விமானம் ஒன்று இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக இராணுவத் தளபதி கூறினார்.
இதேவேளை நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது என்று தெரிவித்த இராணுவத் தளபதி இவ்வாறான செயற்பாடுகளை தவிரத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வெளிநாட்டவர்கள் முடிந்த வரை தாம் தங்கியுள்ள ஹோட்டல் அறைகளிலேயே தங்கியிருக்குமாறு இராணுவத் தளபதி வெளிநாட்டவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் இருந்த அழைத்துவருபவர்களை தாம் தனிமைப்படுத்துவதற்கான காரணத்தை இராணுவத் தளபதி தெரியப்படுத்தினார். தற்பொழுது தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களில் இருவர் இந்தியாவிற்கு சென்று வந்தவர்கள்.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை மேற்கொள்வோர் அங்கு பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இதனாலேயே அவர்களை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
தற்பொழுது நாம் 16 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களை நடத்தி வருகின்றோம். இவற்றில் 2,287 பேர் தங்கியுள்ளனர். இவர்களுள் 21 பேர் வெளிநாட்டர். 19 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு கந்தக்காடு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நோய்வாய்ப்பட்டவர்களுள் ஒருவர் இங்கிலாந்து பிரஜை, 18 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள்.
கந்தக்காடு மத்திய நிலையம் 13 கட்டிடங்களைக் கொண்டது. இதனை நாம் இரண்டாக பிரித்து 26 ஆக மாற்றியுள்ளோம் என்று தெரிவித்த இராணுவத் தளபதி, அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் நாட்டுக்கு வந்தவர்களுள் 90 சதவீதமானோர் காச்சலுடனேயே காணப்பட்டுள்ளனர். ஏனையோர் 24 மணித்தியாலத்துக்குள் காச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment