பட்டதாரிகளுக்கான நியமன பெயர்ப் பட்டியல் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

பட்டதாரிகளுக்கான நியமன பெயர்ப் பட்டியல் வெளியீடு

தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்த போதிலும் நியமனக் கடிதம் கிடைக்கப் பெறாதோர் இது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

கடிதம் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை. 

தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொதுத் தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment